close
Choose your channels

பிரபல நடிகருக்கு மாரடைப்பு: மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் புனித் ராஜ்குமார் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அவருடைய உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

பழம்பெரும் கன்னட நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ராஜ்குமாரின் மகன்தான் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.