close
Choose your channels

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

Friday, August 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சற்றுமுன் கொரோனாவுக்கு பலியானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் வசந்தகுமார் எம்பி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.