close
Choose your channels

நடிகை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை கூறிய கார்த்தி சிதம்பரம் எம்பி!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பிரபல நடிகை மாளவிகா மோகனனுக்கு டுவிட்டர் மூலம் பரிந்துரை செய்துள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது என்பதும் இதனை தொடர்ந்து அவருடைய ஆடிட்டர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ’ஏதாவது புதிய படம் அல்லது வெப் தொடர் பார்க்கலாம் என்றால் எதை பரிந்துரை செய்வீர்கள்? என தனது ஃபாலோயர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பலரும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் ’இன்வெண்டிங் அன்னா’ என்ற வெப்தொடரை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து பல்வேறு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

அமெரிக்க வெப்தொடரான ’இன்வெண்டிங் அன்னா’ கடந்த பிப்ரவரி மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.