close
Choose your channels

10 வருட திரையுலக வாழ்வில் விஜய்சேதுபதியின் முதல் அனுபவம்

Monday, August 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பத்து வருட திரையுலக வாழ்வில் விஜய்சேதுபதி சுமார் 30 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். ஆனால் ஒரு படத்திற்காக கூட இதுவரை அவர் வெளிநாட்டுக்கு படபிடிப்பிற்காக சென்றதில்லை என்ற நிலையில் அந்த குறை தற்போது நிவர்த்தி ஆகியுள்ளது.
ஆம், விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் 'ரெக்க' படத்தின் பாடல்கள் படப்பிடிப்பிற்காக முதல்முறையாக தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வரும் 16ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெக்க' படத்தில் விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், கபீர்சிங், ஹரிஷ் உத்தமன், சதீஷ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை காமன்மேன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.