close
Choose your channels

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் 'ஏறுமயிலேறி' பாடல் ரிலீஸ்!

Monday, October 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடித்த இந்த படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் சிறப்பு தோற்றத்தில் லைலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி ’ஏறுமயிலேறி’ என்ற பாடலை பாடி உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடல் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை தற்போது கார்த்தி ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.