close
Choose your channels

கார்த்தியின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, June 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. மீண்டும் காவல்துறை அதிகாரி வேடத்தில் கார்த்தி நடித்து வரும் இந்த படத்தை சதுரங்கவேட்டை' இயக்குனர் வினோத்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 30ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கார்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.