close
Choose your channels

இமயமலையில் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் அங்கு தனது நண்பர்கள் மற்றும் சாமியார்களை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இமயமலையில் தேசியக்கொடியை ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் ஏந்திய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாளை இந்தியாவில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் அங்கு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகள் உடன் இணைந்து ரஜினிகாந்த் தேசிய கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதுமட்டுமின்றி ஆதி பத்ரிநாத் கோவிலில் 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவையும் ரஜினிகாந்த் வழிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.