close
Choose your channels

'தளபதி 63' படத்தில் இணைந்த பா.ரஞ்சித் பட ஹீரோ?

Saturday, January 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்ற, இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்த வெற்றி படமான 'பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ என்பது அனைவரும் அறிந்ததே

விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.