close
Choose your channels

மாஸ் நடிகர்களுக்கு இணையாக கவின் படத்தின் பிசினஸ்: ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகினர்..!

Wednesday, January 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான கவின் நடித்துள்ள அடுத்த திரைப்படம் மாஸ் நடிகருக்கு இணையாக பிசினஸ் ஆகி கொண்டிருப்பதை பார்த்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமே ரிலீஸ்க்கு முன்னர் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். பல சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த படத்தை வாங்க முன் வரும்

இந்த நிலையில் கவின் நடித்து முடித்துள்ள ’ஸ்டார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாகவும் அதேபோல் தொலைக்காட்சியை ரிலீஸ் உரிமையை விஜய் டிவி நல்ல விலைக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சோனி மியூசிக் சவுத் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கவின் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தின்போது ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.