close
Choose your channels

'விஜய் 60' படத்தின் ஹீரோயின்

Wednesday, February 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி என கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்கும் பரதன், விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாக படக்குழுவினர்களுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், வளர்ந்து வரும் முன்னணி நாயகி கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில விஜய் படங்களில் இரண்டு நாயகிகள் நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு நாயகி மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் அது கீர்த்தி சுரேஷ் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படம் கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களுக்கும் விரும்பும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.