close
Choose your channels

ரம்யா படத்திற்கு ரஜினி பட வசனத்தின் டைட்டில்

Tuesday, September 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே ரஜினியின் புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற வசனத்தை டைட்டிலாக கொண்டு ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது இன்னொரு ரஜினி பட வசனத்தையே டைட்டிலாக கொண்டு ஒரு படம் உருவாக்கப்படவுள்ளது.
ரஜினி, மம்முட்டி நடித்த 'தளபதி' படத்தில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு' என்று ரஜினி மம்முட்டியிடம் ஒரு வசனம் பேசியிருப்பார். இந்த புகழ்பெற்ற வசனமான 'நட்புன்னா என்னானு தெரியுமா' என்ற டைட்டிலில் தற்போது ஒரு படம் உருவாகவுள்ளது.
பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நடித்த ரம்யா நம்பீசன் இந்த படத்தின் நாயகியாகவும் இவருக்கு ஜோடியாக தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணிபுரிந்த கவினும் நடிக்கவுள்ளனர். நெல்சன் உதவியாளர் சிவகுமார் இயக்கவுள்ள இந்த படத்திற்கு தரண் இசையமைக்கவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.