close
Choose your channels

பிரபாஸின் 'புரொஜக்ட் கே' படமும் புராணப்படமா? அப்படியெனில் கமலுக்கு என்ன வேடம்?

Sunday, July 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் கல்கி அவதாரம் குறித்த கதை என்று கூறப்படுகிறது. மகாவிஷ்ணு இதுவரை 9 அவதாரங்கள் எடுத்துள்ள நிலையில் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் எடுக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘புரொஜக்ட் கே’ என்பதில் ’கே’ என்பதற்கு அர்த்தம் கல்கி தான் என்பதும் பத்தாவது அவதாரம் கல்கி என்ற கேரக்டரில் தான் பிரபாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு புராண கதையை விஞ்ஞானபூர்வமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த ‘புரொஜக்ட் கே’ படத்தின் கதை என்றும் கூறப்படும் நிலையில் கல்கி அவதாரமாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்றால் கமல்ஹாசனுக்கு என்ன வேடமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.