close
Choose your channels

2.0 டிக்கெட்டுடன் விடுமுறை: ஊழியர்களை குஷிப்படுத்திய பிரபல நிறுவனம்

Thursday, November 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவு முதலே தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். படம் வெளிவருவதற்கு முன் நெகட்டிவ் கருத்துக்கள் கூறிய ஒருசிலரின் வாய்கள் அடைக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு '2.0' படத்தின் டிக்கெட்டுக்களை இலவசமாக கொடுத்து இன்று ஒருநாள் அலுவலகத்திற்கு விடுமுறையையும் அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குஷியாகியுள்ளனர். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் தலைவர் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டுமே நடக்கும் என அந்த நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிறுவனம் '2.0' படம் வெற்றி அடைந்து பல உலக சாதனை செய்ய வாழ்த்தும் தெரிவித்துள்ளது. அதேபோல் ரஜினிகாந்த் தொழில் மீது காட்டும் பக்தி, அக்கரை நாம் அனைவருக்கும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்றும் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.