close
Choose your channels

விஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம்: தீனா உள்பட சக நட்சத்திரங்கள் வாழ்த்து!

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி மூலம் பல்வேறு நட்சத்திரங்கள் சின்னத்திரையில் ஜொலிப்பது மட்டுமின்றி சின்னத்திரையில் இருந்து பெரிய திரையிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை நிரூபித்தவர்களில் ஒருவர் சரத். இவர் தீனாவுடன் இணைந்து செய்த காமெடிகள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத் தனது காதலி கிருத்திகா என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நிச்சயதார்த்தம் ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சரத்துக்கு இன்று திருமணம் இனிதே நிறைவடைந்து உள்ளது. இதனை அடுத்து தீனா உள்பட அவருடன் பணிபுரிந்த விஜய் டிவி நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சரத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.