close
Choose your channels

பாண்ட்யா படத்தை போட்டு திட்டு வாங்கிய பிரபல நடிகை!

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பை அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நெட்டிசன்களிடம் பிரபல நடிகை ஒருவர் திட்டு வாங்கி கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல தொலலக்காட்சி நடிகை கிறிஸ்டல் டிசோசா, சமீபத்தில் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அந்த புகைப்படத்தின் கீழே 'பாண்ட்யா தனது சகோதரர்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் என்ன தப்பை நெட்டிசன்கள் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. தொடர்ச்சியாக கிறிஸ்டலை கடுமையாக விமர்சனம் செய்து கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருசிலர் வரம்புமீறி இருவருடைய பெற்றோர்களையும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

நெட்டிசன்களின் இந்த வரம்புமீறும் கமெண்டுக்களுக்கு பாலிவுட் நடிகர் அபர்சக்தி குரானா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணை இப்படி தரக்குறைவான வார்த்தைகளால் கேவலமாக பதிவு செய்ய வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார், 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.