close
Choose your channels

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் இந்த 2 பிரபலங்களா? இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Thursday, May 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’, 2018 ஆம் ஆண்டு ’காளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீ 5 சேனலுக்காக ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’வணக்கம் சென்னை’ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.