close
Choose your channels

குறளரசன் இசையமைக்கும் சிம்புவின் அடுத்த படம்

Saturday, June 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கும் குறளரசன் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதேபோல் சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு நடித்த 'வாலு' பட இயக்குனர் விஜய்சந்தர், சிம்புவை மீண்டும் இயக்கவுள்ளார். இந்த படத்திற்குத்தான் குறளரசன் இசையமைக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.