close
Choose your channels

18 வயதிலேயே கவர்ச்சி ரூட்டா? குட்டி நயனின் புது போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்கள் கேள்வி?

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன். மேலும் இவருடைய க்யூட்டான ரியாக்ஷன்களைப் பார்த்த இளைஞர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போலவே இருப்பதாகக் கூறி ‘குட்டி நயன்‘ என்றும் பாராட்டி வந்தனர்.

இப்படி இளைஞர்களிடையே படு வரவேற்பை பெற்றிருக்கும் அனிகா சுரேந்திரன் புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த அனிகா தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்தக் கூட்டணி ரசிர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து மேலும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் ‘மிருதன்’, நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதையடுத்து 18 வயதை எட்டிய அவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கப்பெலா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘ஓமை டார்லிங்’ திரைப்படத்தில் படு போல்டாக லிப்லாக் காட்சிகளில் நடித்தும் அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை அனிகா அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்களிடையே அது வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிவரும் இவர் கவர்ச்சியாக போட்டோஷுட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில் ‘இந்த வயதிலேயே இதெல்லாம் தேவையா?‘, ‘முன்பே எதிர்பார்த்ததுதான்‘ என்பதுபோன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் ‘மாலு’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அதேபோல தமிழில் ‘பிடிசார்’ மற்றும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பார்த்த அவரது ரசிகர்கள் சிலர் வரவேற்பு அளித்து வரும் நிலையில் பெரும்பாலானோர் விமர்சனங்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தகக்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.