close
Choose your channels

ரீஎண்ட்ரி படத்தில் லைலாவின் வித்தியாசமான கேரக்டர்

Wednesday, March 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் ரைசா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் லைலா பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அறிமுக இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கவுள்ளார். திருமணத்திற்கு பின் நடிக்க லைலாவுக்கு பல வாய்ப்புகள் தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து வந்தபோதிலும், அவருக்கு நடிக்க விருப்பமில்லை என்றும், ஆனால் இயக்குனர் சந்துரு கூறிய இந்த கேரக்டர் அவரை மிகவும் கவர்ந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், அர்ஜூனா நாகா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.