close
Choose your channels

பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 3 பிரபல ஹீரோக்கள்..!

Saturday, September 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிசியான இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இதனை அடுத்து கார்த்தி நடிக்கும் ’கைதி 2’, சூர்யா நடிக்கும் ’ரோலக்ஸ்’ மற்றும் ’இரும்புக்கை மாயாவி’ அதையடுத்து பிரபாஸ் படம் என வரிசையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமிட் ஆகியுள்ளார்.

அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தில் அவருடன் அனிருத் அடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்ஜே பாலாஜியின்

’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் அவர் ஏற்கனவே நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளது. ஒரு படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ரத்னகுமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இன்னொரு படம் பாலிவுட் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட்டில் மூன்று முக்கிய ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லோகேஷ் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.