close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் லோகேஷ் கனகராஜ் ஹீரோ!

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படம் ’கேப்டன் மில்லர்’ என்பதும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. ’சாணிக்காகிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் சந்தீப் கிஷான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் ஹீரோவான இவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இந்த படத்தில் சந்தீப் இணைவது இந்த படத்தின் தெலுங்கு வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் இருந்து தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் - இந்தியத் திரைப்படமாக இந்த படம் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.