close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று வெளியாகி முதல் காட்சி முடிந்ததும் பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையதளங்களில் பரவியது. ஒருசிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதால் இந்த படம் நேற்று முதல் நாளில் சுமார் 800 திரையரங்குகளில் 80 சதவீத பார்வையாளர்கள் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்த படம் 10 முதல் 12 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதால் முதல் நாளில் 7.40 கோடி ரூபாய் வசூலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்று அருண்விஜய்யின் ‘சினம்’ படம் வெளியாவதால் ஒரு சில திரையரங்குகள் அந்த படத்திற்கு சென்றாலும், ’பிரம்மாஸ்திரா’ திரைப்படம் பல திரையரங்குகளில் தூக்கப்படுவதால் அதில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் பட்ஜெட்டை இந்த வாரத்திற்குள் வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.