'விஸ்வாசம்' முதல் 'சர்கார்' வரை: டுவிட்டர் டிரெண்டில் தமிழ் சினிமா

  • IndiaGlitz, [Saturday,August 25 2018]

பொதுவாக டுவிட்டர் டிரெண்டில் அரசியல் குறித்த செய்திகளே அதிகம் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டர் டிரெண்ட்களில் பெரும்பாலும் சினிமா சம்பந்தமான அதிலும் தமிழ்சினிமா சம்பந்தமான டிரெண்டுகளே அதிகம் உள்ளது.

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் அதிகாலை 3.40க்கு ஆரம்பித்த டிரெண்ட் அதன்பின்னர் சிவகார்த்திகேயனும் அவரது மகள் ஆராதனாவும் பாடிய 'வாயாடி பெத்த புள்ளே' பாடல், விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் உருவான '96' படத்தின் டிரைலர், விஜய்யின் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தின் டிரைலர் என டுவிட்டர் டிரெண்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்சினிமா செய்திகள் தான் ஆக்கிரமித்துள்ளன.

அதுமட்டுமின்றி 'சர்கார்' படத்தின் வொர்க்கிங் ஸ்டில், நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' மற்றும் '60 வயது மாநிறம் படங்களில் ரிலீஸ் ஆகிய செய்திகளும் டிரெண்டில் உள்ளது. அதேபோல் 'சீமராஜா', வடசென்னை, சண்டக்கோழி 2'  முதல் 'சர்கார்' வரை என வினாயகர் சதுர்த்தி தினம் முதல் தீபாவளி வரை மாஸ் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் இருப்பதால் தீபாவளி வரை தமிழ் சினிமா செய்திகள் டிரெண்ட் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நீங்கள் இந்தியாவின் பெரிய பொக்கிஷம்: பாரதிராஜாவின் பாராட்டை பெற்ற நடிகர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுமி தித்யா நடிப்பில் லக்ஷ்மி' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு 'சர்கார்' சாம்ராஜ்யம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

அப்போ, யுத்தம்தான் முடிவு பண்ணிட்டிங்களா? செக்க சிவந்த வானம் டிரைலர் விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. டிரைலர் முழுவதும்

கேரளாவில் மீண்டும் கனமழை: வானிலை எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அம்மாநிலமே உருக்குலைந்து வெள்ளத்தால் சிறுசிறு தீவுகளாக மாறியது

'விஸ்வாசம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பிரேக்கிங் செய்திகளை பின்னுக்கு தள்ளி டிரெண்டில் இருந்து வருகிறது.