close
Choose your channels

அடுத்த 5 நாட்களுக்கு 'சர்கார்' சாம்ராஜ்யம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு அக்டோபர் 2ஆம் வெளியாகும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் இந்த பரபரப்பும், சமூக வலைத்தளங்களின் டிரெண்டும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஆச்சரிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன்படி இந்த படத்தின் விதவிதமான வொர்க்கிங் ஸ்டில்கள் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் 'சர்கார்' சாம்ராஜ்யம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற முன்னணி சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் நாளை முதல் சமூக வலைத்தளங்கள் அதிரும் என்பதில் சந்தேகம் இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.