close
Choose your channels

நீங்கள் இந்தியாவின் பெரிய பொக்கிஷம்: பாரதிராஜாவின் பாராட்டை பெற்ற நடிகர்

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுமி தித்யா நடிப்பில் 'லக்ஷ்மி' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் விஜய்க்கும், சிறுமி தித்யாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், படம் பார்த்த பின்னர் என்ன சொல்வது என்றே தனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது இயக்குனர் விஜய்க்கு பிரபுதேவாவிடம் இருந்து மொபைலில் அழைப்பு வர, அதனை விஜய், பாரதிராஜாவிடம் கொடுத்தார்.

மொபைலில் பிரபுதேவாவிடம் பேசிய பாரதிராஜா, 'இந்த படத்தில் நடித்த நீங்களும், இயக்குனர் விஜய்யும், இந்த சிறுமியும் உண்மையில் இந்தியாவின் பெருமைக்குரிய நபர்கள். நீங்கள் இந்தியாவின் பெரிய பொக்கிஷம்' என்று பிரபுதேவாவிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.