close
Choose your channels
Kaatrin Mozhi

'விஸ்வாசம்' முதல் 'சர்கார்' வரை: டுவிட்டர் டிரெண்டில் தமிழ் சினிமா

Saturday, August 25, 2018 • தமிழ் Comments

பொதுவாக டுவிட்டர் டிரெண்டில் அரசியல் குறித்த செய்திகளே அதிகம் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டர் டிரெண்ட்களில் பெரும்பாலும் சினிமா சம்பந்தமான அதிலும் தமிழ்சினிமா சம்பந்தமான டிரெண்டுகளே அதிகம் உள்ளது.

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் அதிகாலை 3.40க்கு ஆரம்பித்த டிரெண்ட் அதன்பின்னர் சிவகார்த்திகேயனும் அவரது மகள் ஆராதனாவும் பாடிய 'வாயாடி பெத்த புள்ளே' பாடல், விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் உருவான '96' படத்தின் டிரைலர், விஜய்யின் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தின் டிரைலர் என டுவிட்டர் டிரெண்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்சினிமா செய்திகள் தான் ஆக்கிரமித்துள்ளன.

அதுமட்டுமின்றி 'சர்கார்' படத்தின் வொர்க்கிங் ஸ்டில், நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' மற்றும் '60 வயது மாநிறம் படங்களில் ரிலீஸ் ஆகிய செய்திகளும் டிரெண்டில் உள்ளது. அதேபோல் 'சீமராஜா', வடசென்னை, சண்டக்கோழி 2'  முதல் 'சர்கார்' வரை என வினாயகர் சதுர்த்தி தினம் முதல் தீபாவளி வரை மாஸ் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் இருப்பதால் தீபாவளி வரை தமிழ் சினிமா செய்திகள் டிரெண்ட் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.