close
Choose your channels

லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அஜித் ரசிகர்கள் குஷி..!

Wednesday, February 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது 24 வது தயாரிப்பு திரைப்படத்தின் அறிவிப்பை நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த அறிவிப்பு ’அஜித் 62’ படமாக தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 10:30 மணிக்கு தங்களுடைய 24வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்பட்டிருப்பதை அடுத்து நாளை ’ஏகே 62’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜித்தின் 62வது திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது என்பதும் அதன் பின்னர் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டதை அடுத்து தற்போது மகிழ்திருமேனி ’ஏகே 62’ படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’ஏகே 62’ படத்தின் அறிவிப்பு தான் நாளை வெளி வருமா? அல்லது வேறு படத்தின் அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.