close
Choose your channels

'சர்கார்' படத்தின் மொத்த வாய்ப்பையும் பெற்ற பிரபலம்

Thursday, July 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பல சாதனைகள் புரிந்தது என்பது தெரிந்ததே. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக், இந்த பாடலால் புகழின் உச்சம் தொட்டார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதும் மொத்த வாய்ப்பை விவேக் பெற்றுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த விவேக், இந்த வாய்ப்பை வழங்கிய விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாடல் எழுதுவதில் தான் பெருமை கொள்வதாகவும் கூறினார். எனவே 'மெர்சல்' படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், விவேக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பாடல்களும் புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.