close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி அறிவிப்பு

Sunday, December 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிய 'வந்தா ராஜாவதான் வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள திரைப்படம் ஒன்று அறிவிக்கப்பட்டு அந்த படத்தின் டைட்டில் 'மாநாடு' என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசியல் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.