close
Choose your channels

17 வருடங்களுக்கு பின் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் 'மின்னலே'. இதே படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவுதம் மேனன், ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் மாதவன் ஆகியோர்களுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது

இந்த நிலையில் தற்போது 17 வருடங்கள் கழித்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவுதம் மேனன் தற்போது தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் மாதவன் படம் குறித்த அறிவிப்பை கவுதம்மேனன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.