close
Choose your channels

சென்னையில் ஒரே நாளில் 2 மாதவன் படங்கள் ரிலீஸ்

Saturday, January 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாதவன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழில் 'இறுதிச்சுற்று' என்ற பெயரிலும், இந்தியில் 'Saala Khadoos' என்ற பெயரிலும் வெளியாகிறது.


இந்நிலையில் சென்னையில் இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் ஒருசில திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தி மொழி பேசும் மக்கள் சென்னையில் அதிகம் இருப்பதாலும், இந்தி திரையுலகிலும் மாதவன் பிரபல நடிகர் என்பதாலும் இந்த படம் சென்னையில் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.

குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மாதவன், ரித்திகாசிங், நாசர், ராதாரவி, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை சுதா பிரசாத் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.