close
Choose your channels

'விக்ரம் வேதா' ரன்னிங் டைம்

Tuesday, July 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதில் இருந்தே இந்த படத்தின் உறுதியாகியுள்ளதால் படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில் சென்சாரில் 'யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் 147 நிமிடங்கள் ஓடுகின்றது, அதாவது 2 மணி 27 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.

விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோர் சமீபத்தில் கவண்' மற்றும் 'இறுதிச்சுற்று' என்ற வெற்றி படங்களை தனித்தனியே கொடுத்த நிலையில் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் மதயானை கூட்டம்' கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.