close
Choose your channels

'ஜூங்கா' படத்தில் மடோனாவின் கேரக்டர் என்ன?

Sunday, July 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜூங்கா படத்தில் மடோனாவின் கேரக்டர் என்ன?

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள 'ஜுங்கா' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் சாயிஷா நாயகியாக இருந்தாலும் இன்னொரு முக்கிய வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே 'காதலும் கடந்து போகும்' 'கவண்' ஆகிய இரண்டு படங்களில் நடித்த நிலையில் இந்த படம் விஜய்சேதுபதியுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் ஆகும்

இந்த படத்தில் மடோனாவுக்கு ஒரு பாடல் உள்பட முக்கிய காட்சிகள் இருப்பதால் அவருக்கு சிறப்பு தோற்றம் என்று கூற முடியாது என்றும் அவர் இந்த படத்தில் ஒரு தெலுங்கு பெண்ணாக நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர்களில் ஒன்று என்றும் பேட்டி ஒன்றில் மடோனா குறிப்பிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி குறித்து மடோனா கூறியபோது, 'சக நடிகர் என்பதையும் தாண்டி அவர் தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும், தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் அவரை பார்ப்பதாகவும் மடோனா தெரிவித்துள்ளார். அடிப்படையில் தான் ஒரு நல்ல பாடகி என்றும் விரைவில் தமிழ்ப்பாடல் ஆல்பம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் மடோனா மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.