close
Choose your channels

மகேஷ்பாபு மகள் அறிமுகம்: 'தளபதி 66' படத்திலும் நடிப்பாரா?

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அறிமுகம் ஆக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் ’சர்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படத்தில் அவரது மகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

’சர்காரு வாரி பாட்டா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அறிமுகமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் நடனமாடிய ஒரு சில காட்சிகள் அந்த வீடியோவில் இருப்பதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் முழுமையாக இன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தில் விஜய் மகளாக சித்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் மகேஷ் பாபுவின் ’சர்காரு வாரி பாட்டா’ படத்தில் சித்தாரா நடிக்க வந்ததை அடுத்து ’தளபதி 66 படத்திலும் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.