close
Choose your channels

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மகேஷ்பாபுவின் முத்த புகைப்படம்

Sunday, April 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மகேஷ்பாபுவின் முத்த புகைப்படம்

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படமும் மகேஷ்பாபுவின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபு தனது சமூக வலைத்தளத்தில் அவர் தனது மனைவி நம்ரதாவுக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பொதுவாக மகேஷ்பாபு தனது மற்றும் தனது குடும்பத்தின் பெர்சனல் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதில்லை. ஆனால் அவர் இம்முறை தனது மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் அவர் தனது மனைவிக்கு இந்த நேரத்தில் நன்றியையும் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா? 'பாரத் அனே நேனு' திரைப்படத்தில் பணிபுரிந்த இயக்குனர் கொரட்டலா சிவா உள்பட அனைவருக்கும் நம்ரிதா ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார். இதற்காகவே மகேஷ்பாபு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.