close
Choose your channels

கமல், மோகன்லால், சல்மான்கான் பட்டியலில் இணைந்த மகேஷ்பாபு!

Thursday, November 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது

ஏற்கனவே தமிழ் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் அவர்களும், மலையாள மோஷன் போஸ்டரை மோகன்லால் அவர்களும், ஹிந்தி மோஷன் போஸ்டரை சல்மான்கான் அவர்களும் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிடும் நட்சத்திரம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் தெலுங்கு மோஷன் போஸ்டரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 இந்திய பிரபலங்கள் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை இன்று மாலை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.