close
Choose your channels

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் மக்கள் நாயகன் ராமராஜன்.. அசத்தலான டைட்டில் அறிவிப்பு!

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களில் நடித்த மக்கள் நாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகிறார். அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக ராமராஜன் அறிமுகமானார். அதன்பின் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார் என்பதும் குறிப்பாக ’கரகாட்டகாரன்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்பதும், 2012ஆம் ஆண்டு ’மேதை’ என்ற படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் மக்கள் நாயகன் ராமராஜன் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும், இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.