close
Choose your channels

அஜர்பைஜானில் பிரபல மலையாள நடிகர்..அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இணைந்ததாக அறிவிப்பு..!

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் மேபு ஜார்ஜ், அஜர்பைஜானில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனில் அஜித்தின் தமிழ் சினிமாவில் நடிப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் ’விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பிரபலங்கள் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது மேபு ஜார்ஜ் இணைந்துள்ளதை அடுத்து இவரும் இந்த படத்தின் ஒரு வில்லன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்துடன் இவருக்கு இரண்டு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்துவரும் இந்த படத்தில் ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.