close
Choose your channels

'அஜித் 61' படத்தில் மோகன்லால் இணைகிறாரா? ஆச்சரியமான தகவல்

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் மோகன்லால் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜித்தின் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை படக்குழுவினர் விரைவில் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ’உன்னைப்போல் ஒருவன்’ விஜய்யின் ‘ஜில்லா’ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் மோகன்லால் நடித்துள்ளார் நிலையில் தற்போது அஜித்துடனும் அவர் நடிக்கவுள்ளார் என்ற செய்தி கோலிவுட் திரையுலகினர்களுக்கே ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால் நடித்த ’மரைக்கார்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜீத் திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் செய்தார் என்பதும் இது குறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

’அஜித் 61’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், தபு ஆகியோர் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.