close
Choose your channels

கமல்ஹாசனுடன் உரையாடும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்: வைரல் வீடியோ

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ’போன முறை வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்திற்கு இடைஞ்சலாக இருந்தது எது? என அபிராமியிடம் கமல்ஹாசன் கேட்க அதற்கு அபிராமி, ‘நான் அது என்ன என்பதை கண்டுபிடித்து விட்டேன், ஆனால் சொல்ல மாட்டேன்’ என்று கூறுகிறார்.

அதேபோல் வனிதா விஜயகுமார் கூறியபோது, ‘பிக்பாஸ் என்னுடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியது’ என்று கூறினார். மேலும் தாடி பாலாஜி கமல்ஹாசனிடம், ‘இந்த முறை முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் செய்யும் ஒரு பாலாஜியை நீங்கள் பார்க்கலாம்’ என்று கூறுகிறார்.

’கோபம் அல்லது சாபம் இந்த இரண்டில் இப்பொழுது நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள்’ என பாலாஜி முருகதாசிடம் கமல் கேட்க, அதற்கு அவர் ’தெரியவில்லை சார்’ என்று கூறுகிறார். மேலும் சினேகன் கூறும்போது, ‘சில தவறுகளை நான் செய்திருக்கிறேன்’ என்று கூறுகிறார்.

அனிதா சம்பத் கூறியபோது, ‘நம்பிக்கையுடன் ஸ்ட்ராங்காக நான் ஒரு வெற்றியாளர் என உணர்கிறேன்’ என்று கூறுகிறார். கடைசியாக ஜூலி கூறியபோது, ‘எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை’ என்று கூறுவதுடன் இந்த புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.