காதலில் வெற்றி பெற விஷம் குடித்த வாலிபர்: அதிர்ச்சியில் மனைவி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வேறு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர். இந்த நிலையில் திருமணமான பத்தாவது நாளில் காதலியை கரம் பிடிக்க விஷம் குடித்தது போல் நாடகமாடிய வாலிபர் தற்போது பிடிபட்டுள்ளார்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கையா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சடங்குகள் முடிந்த பின்னர் நாகமணியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல லிங்கையா வந்தார். அப்போது லிங்கையாவுக்கு நாகமணி பால் கொடுத்துள்ளார்.
அந்த பாலை குடித்தவுடன் வயிற்று வலி ஏற்பட்டு லிங்கையா சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது லிங்கையாவுக்கு நாகமணி விஷம் கலந்த பாலை கொடுக்க வில்லை என்றும் லிங்கையாவே விஷத்தை குடித்துவிட்டு நாடகமாடியதும் தெரிய வந்தது
இது குறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ’தான் நாகமணியை பெற்றோர் கட்டாயத்தால் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் தான் வேறு ஒரு பெண்ணை காதலித்ததாவும் எனவே நாகமணி விஷம் கலந்த பாலை கொடுத்து விட்டதாக புகார் கூறி அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு அதன் பின்னர் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து இலங்கை மற்றும் அவருடைய காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தான் காதலித்த பெண்ணை கைப்பிடித்து காதலில் வெற்றி பெற தன்னை நம்பி வந்த அப்பாவி மனைவி மீது கொலைப்பழி சுமத்திய லிங்கையாவுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று அந்த பகுதியினர் போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்,