close
Choose your channels

'PS 2' இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலம்.. நேரில் அழைப்பு விடுத்த மணிரத்னம்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கங்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்பதால் இந்த படமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இரண்டாம் பாக இசை வெளியீட்டு விழாவிலும் சில பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மணிரத்னம் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் மேலும் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.