close
Choose your channels

'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட்: ஸ்தம்பித்த சமூக வலைத்தளங்கள்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே இந்த படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸாவது உறுதி என்று சற்றுமுன் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததை பார்த்தோம்

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை பிற்பகல் 12. 30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அனேகமாக ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அறிவிப்பு அல்லது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தான் நாளை பிற்பகலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாளை மதியத்தை எதிர்பார்த்து கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இந்த மாஸ் தகவலை அடுத்து சில நிமிடங்களில் இது குறித்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.