close
Choose your channels

'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியிலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஷிமோகாவிலும் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் பேசிக் கொண்டிருந்த ஸ்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் அதே படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருக்கும் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது என்பதும் அதேபோல் இந்த படத்தின் வியாபாரம் 90%க்கும் மேல் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos