close
Choose your channels

'மாஸ்டர்' படம் குறித்த மாஸ் அறிவிப்பு: விஜய் ரசிகர்கள் குஷி!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டீசர் யூடியூப் உள்பட சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதற்கான டப்பிங் பணிகளும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்ததாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

அந்த வகையில் தற்போது தமிழை அடுத்து தெலுங்கிலும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ’மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என மாஸ் அறிவிப்பு ஒன்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்களிலுள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.