close
Choose your channels

அக்கா-தங்கை நடிகைகள் நடிக்கும் த்ரில் ஆக்சன் படம்: டைட்டில் அறிவிப்பு!

Sunday, December 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே படத்தில் அக்கா தங்கை நடிகைகள் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ’வானவில் வாழ்க்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். அதன் பின்னர் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், ‘2.0’, உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் மாயா கிருஷ்ணன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இண்ட்ரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருடைய சகோதரி ஸ்வாகத் கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை லியோ விஜயன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஜிஜேஷ் அவர்கள் கூறியபோது, ‘இந்த படத்திற்கு ‘இண்ட்ரோ’ என்ற டைட்டில் ஏன் வைத்தோம் என்பதை படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு புரியும் என்றும் இந்த படம் ஒரு கடத்தல் மற்றும் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் ஸ்வாகத் கிருஷ்ணன் பாசிட்டிவ் கேரக்டரிலும் மாயா கிருஷ்ணன் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் கூறியுள்ளார்.

ஜனவரி முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதியில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக இருக்கும் என்பதால் தற்போது மாயா மற்றும் ஸ்வாகத் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.