மெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்

Mersal-Vijay

இளையதளபதி விஜய் நடித்த படங்களில் பெரும்பாலும் ஒரு ஹீரோயின் மட்டும் இருந்தாலும் ஒருசில படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளனர். வரும் தீபாவளி அன்று வெளிவரும் 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதேபோல் விஜய் இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்களுடன் நடித்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

பூவே உனக்காக

Mersal-Vijay

சங்கீதா, அஞ்சு அரவிந்த்: விஜய் நடித்த முதல் சூப்பர் ஹிட் படம் என்று இந்த படத்தை கூறலாம். ஒரு முக்கோண காதல் கதையை இயக்குனர் விக்ரமன் மிகவும் டீசண்டாக இயக்கியிருப்பார். அஞ்சு அரவிந்தை விஜய் காதலிக்க, ஆனால் அஞ்சு அரவிந்தோ இன்னொருவரை தான் காதலிப்பதாகவும், அதற்கு விஜய்யே உதவ வேண்டும் என்றும் கூறுவார். அவருக்கு உதவி செய்ய கிராமம் ஒன்றுக்கு வரும் விஜய்யை சங்கீதா காதலிப்பார். முடிவில் முதல் காதலே பெரியது என்ற கருத்துடன் இந்த படம் முடிக்கப்பட்டிருக்கும்

நினைத்தேன் வந்தாய்

Mersal-Vijay

தேவயானி, ரம்பா: இதுவும் ஒரு முக்கோண காதல் கதை. விஜய்யும் ரம்பாவும் உயிருக்குயிராக காதலிப்பார்கள். ஆனால் ரம்பாவின் சகோதரி தேவயானியுடன் எதிர்பாராத வகையில் நிச்சயதார்த்தம் ஆகிவிடும். அதன்பின்னர் என்ன நடக்கின்றது என்ற கதை விறுவிறுப்பாக இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும்

குஷி

Mersal-Vijay

ஜோதிகா, மும்தாஜ்: இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா மட்டுமே நடித்திருந்தாலும், ஜோதிகாவை அவ்வப்போது வெறுப்பேற்ற, மும்தாஜூடன் நெருக்கமாக பழகுவது போல் விஜய் நடிப்பார். மும்தாஜின் கவர்ச்சி காட்சிகள், கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் இந்த படத்தின் பிரபலம்

ப்ரெண்ட்ஸ்

Mersal-Vijay

தேவயானி, அபிநயஸ்ரீ: சூர்யாவுடன் ராதாரவி வீட்டில் வேலைக்கு வரும் விஜய், முதலில் அபிநயஸ்ரீயை பார்த்து அவருடன் பழகுவார். ஆனால் அந்த வீட்டிற்கு தேவயானி வந்தவுடன் அபிநயஸ்ரீயை விட்டுவிட்டு தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொள்வார்

பத்ரி

Mersal-Vijay

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மோனல், பூமிகா என இரண்டு நாயகிகள். கல்லூரி மாணவியான மோனலை காதலிக்கும் விஜய், பூமிகாவிடம் தினமும் கார், பணம் ஆகியவற்றை வாங்கி செல்வார். விஜய் தன்னைத்தான் காதலிப்பதாக பூமிகா நினைத்து கொண்டு அவருக்கு உதவிகள் செய்வதோடு மனதார காதலிப்பார்.இறுதியில் எந்த காதல் வெற்றி அடைந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை

வேலாயுதம்:

Mersal-Vijay

ஹன்சிகா, ஜெனிலியா: விஜய்க்கு முறைப்பெண்ணாக ஹன்சிகா ஜோடியாக நடித்திருந்தாலும், பத்திரிகையாளரான ஜெனிலியாவும் ஜோடிபோல் ஒருசில காட்சிகள் இந்த படத்தில் இருக்கும்

தலைவா

Mersal-Vijay

அமலாபால், ராகினி: இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தாலும் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து விஜய்யை காப்பாற்றும் ராகினி அவரை ஒருதலையாக காதலிப்பார்

புலி

Mersal-Vijay

ஸ்ருதிஹாசன், நந்திதா, ஹன்சிகா: இந்த படத்தில் விஜய்க்கு மூன்று நாயகிகள். அப்பா மருதுவீரனுக்கு ஜோடியாக நந்திதாவும், மகன் புலிவேந்தனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்திருப்பார்கள். இடையில் இளவரசி ஹன்சிகாவும் புலிவேந்தனை காதலிக்கும் காட்சிகளும் உண்டு

தெறி

Mersal-Vijay

சமந்தா-எமிஜாக்சன்: இந்த படத்தில் விஜய்-சமந்தா ஜோடி மிகப்பொருத்தமாக இருக்கும். சமந்தா இறந்த பின்னர் விஜய்யின் மகளுக்கு டீச்சர் கேரக்டரில் நடித்த எமிஜாக்சன் விஜய்யுடன் சில காட்சிகள் இணைந்து நடித்திருப்பார்.

மெர்சல்

Mersal-Vijay

வரும் தீபாவளி தினத்தன்று வெளிவரும் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யுடன் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். விஜய்யுடன் முதல்முறையாக நித்யாமேனன், 'கத்தி' படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக சமந்தாவும், 'துப்பாக்கி, ஜில்லா, படத்திற்கு பின்னர் மூன்றாவது முறையாக காஜல் அகர்வாலும் விஜய்யின் மூன்று கேரக்டர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் ஹீரோயின்களின் கெமிஸ்ட்ரி குறித்து வரும் தீபாவளி அன்று இந்த படத்தின் விமர்சனத்தில் பார்ப்போம்

மெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்