ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

  • IndiaGlitz, [Friday,February 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று கூறினார். ரஜினியின் இந்த பதிலுக்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஜெயகுமார் காட்டமாக பதிலளித்தார்.

பி.இ பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என கூறுவதுண்டு. ரஜினி என்ன பி.இ பட்டதாரியா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், தமிழகத்தில் எந்த சிஸ்டம் சரியில்லை என ரஜினி விளக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், சிஸ்டம் சரியில்லை என்று தமிழகத்தை கூறும் ரஜினி, கர்நாடகா சென்று சிஸ்டத்தை சரிசெய்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

புதியதாக அறிமுகமாகும் டிவிக்கு மாப்பிள்ளையாகிறார் ஆர்யா

இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த டிவி வரும் 19ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

அன்புச்செழியன் முன்னிலையில் 'திமிர் பிடிச்சவன்'

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பேட்மேன் ரிலீஸ் எதிரொலி: பெண்களுக்கு சத்யம் திரையரங்கின் சிறப்பு சேவை

பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவான 'பேட்மேன்' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெண்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்