close
Choose your channels

புதியதாக அறிமுகமாகும் டிவிக்கு மாப்பிள்ளையாகிறார் ஆர்யா

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த டிவி வரும் 19ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழில் தொடங்கப்படவுள்ள கலர்ஸ் டிவியின் அறிமுகவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்

இந்த டிவியில் ஒளிபரப்பாகும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற தொடரில் ஆர்யா நடிக்கவுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்  திருமணத்திற்கு பெண் தேவை என்று ஆர்யா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது ஞாபகம் இருக்கலாம். அதில் தேர்வான 16 பெண்களும் இந்த தொடரில் நடிக்கவுள்ளனர்.

இதுகுறித்து ஆர்யா கூறியபோது, 'நான் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடருக்காக மட்டும் இந்த பெண்களை தேர்வு செய்யவில்லை. இவர்களில் ஒருவரை எனக்கு பிடித்துவிட்டால் அவரை திருமணம் செய்து கொள்வேன்' என்றும் ஆர்யா கூறியுள்ளார். இந்த தொடர் 40 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ஆர்யாவை மனம் கவரும் அந்த பெண் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.