close
Choose your channels

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது

லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.